×

தமிழக நெடுஞ்சாலை துறை சார்பாக நம்ம சாலை செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழக நெடுஞ்சாலை துறை சார்பாக நம்ம சாலை செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்கள் குறித்து புகைப்படத்துடன் புகார் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் புகார் மின்னஞ்சல் மூலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிக்கு அனுப்பப்படும். மாநில நெடுஞ்சாலையில் உள்ள சாலைகள் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். இதர பகுதிகளில் உள்ள சாலைகள் 72 மணி நேரத்தில் சரி செய்யப்படும்.

சாலைகள் பராமரிப்பில், அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சாலைகளை பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகளில் குழிகள் இருந்தாலும் ஆய்வு செய்து சீர் செய்ய திட்டஇயக்குநர், மண்டல அலுவலர்களிடம் அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு சாலை மேம்பாடுதிட்டம், சென்னை – கன்னியாகுமாரி சாலை மேம்பாடு திட்டம்போன்றவற்றின் கீழ் வரும் சாலைகளில், தார்சாலை போடும் வரைபோக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகளை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கத் தவறும் பட்சத்தில், அதனைத் தலைமை பொறியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அனைத்து சாலைப் பணிகளையும் அக்டோபர் தொடங்கும் முன்பாகவே முடிக்க வேண்டும். பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உடனடியாக பணிகளை செயலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைபெய்தவுடன் கள ஆய்வு செய்து,எங்கு மழைநீர் தேங்குகிறது, எங்கு மழை நீர் சாலையைக் கடக்கிறது போன்றவற்றை ஆய்வு செய்து, அவற்றை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஜவகர்லால் நேரு சாலை கத்திப்பாரா முதல் கோயம்பேடு வரை,ஜெனரல் பீட்டர்சன் சாலை, காந்தி இர்வீன் பாலம், திருவள்ளுவர் சாலை, ராமபுரம் சாலை,கொளத்தூர் சாலை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பணிகளை அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க, செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

The post தமிழக நெடுஞ்சாலை துறை சார்பாக நம்ம சாலை செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayaniti Stalin ,Tamil Nadu Highway Department ,Chennai ,Tamil Highways Department ,Dinakaran ,
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர்,...